Read Time:1 Minute, 3 Second
கிள்ளையில் தனியார் பவர் கம்பெனி புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. பேரூராட்சி துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில் புதுச்சேரி மகாத்மா காந்தியின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில் பவர் கம்பெனி தலைமை அதிகாரி குகன்,பரதன், மக்கள் தொடர்பு அதிகாரி சம்பத், உட்பட பலர் பங்கேற்றனர் பேரூராட்சி தலைமை எழுத்தாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி