0 0
Read Time:1 Minute, 28 Second

தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %