0 0
Read Time:1 Minute, 43 Second

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல அளவிலான டென்னிஸ் பந்து போட்டிக்கு, சிதம்பரம் வீனஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் என். பிரணவ்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான டென்னிஸ் பந்து போட்டி கடந்த 19-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில், கடலூர் மாவட்டத்திலிருந்து 7 மாணவ, மாணவிகள் தென்மண்டலப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வீனஸ் பள்ளி மாணவர் என். பிரணவ்ராஜ்-ம் ஒருவர்.

மாணவர் என். பிரணவ்ராஜை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் திரு. வீனஸ் எஸ். குமார், தாளாளர் திருமதி ஏ. ரூபியல் ராணி, இயக்குநர் திரு. வி. அருண், தலைவர் டாக்டர் கே. லியோனா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பள்ளியின் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைக்க பள்ளி நிர்வாகம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

You missed