0 0
Read Time:1 Minute, 50 Second

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் தேர்தல் குறித்து தெருமுனை பிரச்சார கூட்டம் கிள்ளை கடை வீதியில் நடைபெற்றது. மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கோதை வசந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கிள்ளை பேரூர் கழக செயலாளர் தமிழரசன் மாவட்ட பாசறை செயலாளர் வசந்த்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ராமமோகன், பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ. மகேஷ் முன்னிலை வகித்தனர். வர்த்தக அணி நகர செயலாளர் தென்றல் குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து வர்த்தக அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி கலந்து கொண்டு பேசினார். இதில் காட்டுமன்னார்கோயில் நகர செயலாளர் எம் ஜி ஆர் தாசன் மாவட்ட துணை செயலாளர் மாவட்ட தொழில்நுட்பு பிரிவு செயலாளர் எள்ளேரி பிரபு ஒன்றிய செயலாளர்கள் அசோகன் ரங்கசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %