0 0
Read Time:2 Minute, 15 Second

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்றைய தினமே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ் நாட்டில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.69 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பல்வேறு வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். சுயேட்சைகள் பலரும் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு, அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்.9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் பிரச்சாரம் ஏப்.21-ம் தேதிமாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அது முதல் தேர்தல் நாளான ஏப்.23 மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் வரையிலான 48 மணி நேரம் அமைதி காலமகும். அந்த கால கட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *