பரங்கிப்பேட்டை, மார்ச்.3-கிள்ளை கடற்கரையில் நேற்று மாசி மக விழாவை யொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியில் கலந்து கொள் வதற்காக ஸ்ரீமுஷ்ணம் பூவாராக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக கிள்ளைக்கு வருகை தந்தார். அப்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிள்ளை தைக்கால் தர்காவில் முத்தவல்லி சையதுசக்கப் தலைமையில் முஸ்லிம்கள், பூவராகசுவாமிக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரனும் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் மலர், தலைமைஎ முத்தர் செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். இதைய டுத்து கடை வீதியில் உள்ள மண்டபத்தில் பூவராகசுவாமி எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கிள்ளை கடற்கரையில் ஏராளமான சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.