0 0
Read Time:3 Minute, 15 Second

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கி ழமை நடைபெற்றது. பிரசித்திபெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் நவ.3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கானஏற் பாடுகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக்கூட் டம் உதவி ஆட்சியர் சி.கிஷன்குமார் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் சிதம்பரம் ஸ்ரீதில்லை கோவிந்தராஜ சுவாமி தேவஸ் தானம் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அக்.29-ம் தேதி முதல் யாகசாலை பூஜை தொடங்கப்படுவது குறித்தும், நவ.3-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்குவது, கும்பாபிஷே கத்தை காண கோயில் மேற்கூரையில் பக்தர்கள் எத்தனை பேரை அனுமதிப்பது, குடிநீர், தற்காலிக கழிப்பறை அமைப்பது உள் ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது, போக்குவரத்தை சீரமைப் பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆலோசனைக்கூட்டத்தில் சிதம்பரம்டிஎஸ்பிடி.பிரதீப், உதவி ஆட்சியர் நேர்முக உதவியாளர் புகழேந்தி, வட்டாட்சியர் எஸ். கீதா சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர், இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் ஜெ.சீனுவாசன், நகராட்சி ஆணை யர் த.மல்லிகா, பொறியாளர் சுரேஷ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வி.மோனிஷா. தீயணைப்பு நிலைய அலுவலர் பி.மணிமாறன், மின்வாரிய உதவிப் பொறியாளர் கார்த்தி, தெய் வீக பக்தர்கள் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா, பெருமாள் கோயில் டிரஸ்டிகள் வி.எஸ்.சம்பத், வி.கிருஷ்ணமாச்சாரி, ஆர். சவுந்தரராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமரன், நகரமன்ற உறுப்பினர்கள் ஏஆர்சி.மணிகண்டன், பாலசுப்பிரம. ணியன், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் ஏ.சிவராமவீரப்பன், முரளித ரன், சிதம்பரநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்து களை தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %