சிதம்பரம் நகராட்சில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு வாரியாக சிறப்பு கூட்டம் நடந்து. இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத் திற்கு, கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன் தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, நகராட்சி மேலாளர் காதர் கான் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மழைக் காலம் துவங்கியுள்ளதால், வார்டுகளில் செல்லும்,
மழைநீர் வடிகால்களில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும், அனைத்து பகுதியிலும், தினமும், குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி செய்ய வேண்டும்.
மழை பாதிப்பின் போது அதிகரிக்கும் கொசு உற்பத்தியை கட்டுப்படுத் தும் வகையில், வாரம் இரு முறை கொசு மருந்து அடிக்க வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறு வாய்க்கால்கள் வேண்டும், தூர்வார வேண்டும், இளமையாக் கினார் கோவில் குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி