0 0
Read Time:3 Minute, 14 Second

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம் கருத்து!

தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டு தாய்மார்கள் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதைப் போல இருக்கும் பெற்றோர்கள் இதற்கு நல்லதொரு தீர்வு வேண்டும் என்று நித்தம் நித்தம் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்குடன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ள சில முன்னெடுப்புக்கள் மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்றவழக்­கு­களை விசா­ரிக்க மதுரை, திரு­நெல்­வேலி,கோயம்­புத்­தூர், சேலம்,திருச்சி, ென்னை மற்றும் சென்­னை­யின் சுற்றுப்­புற பகு­தி­க­ளில் ஏழுதனிச் சிறப்பு நீதி­மன்­றங்­கள்புதி­தாகஅமைக்­கப்­
ப­டும். இத்­தகைய குற்றங்­கள் தொடர்­பான வழக்­கு­களை விரைந்துமுடிக்க, மாவட்­டந்தோறும் கூடு­தல் காவல் கண்கா­ணிப்­பாளர் தலைமையில் சிறப்­புக்குழு அமைக்­கப்­ப­டும். பாலியல் குற்றங்­க­ளில் தண்டனை பெற்று,சிறை­யில் இருக்­கின்ற கைதி­க­ளுக்கு, முன்­வி­டு­தலை கிடைக்­காத­வ ­கை­யில்தமிழ்­நாடு சிறைத்துறை
விதி­கள்திருத்­தம் செய்­யப்­ப­டும் என்பதை வரவேற்கின்றோம்.

அதே சமயம் கண்ணுக்கு கண் காலுக்கு கால் என்னும் அரபு நாட்டு தண்டனைகளை போல கூட புதிய சட்டதிட்டங்களை இயற்றினாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒரே குரலில் ஓரணியில் ஆதரிப்பார்கள் என்பதும் உறுதி. இருந்த பொழுதிலும் இந்த அளவிற்காவது இப்பிரச்சனையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை எண்ணி மகிழ்வோம். மேலும் பாலியல் குற்றச் செயலுக்கு தூண்டும் ஆபாச வலைதளங்கள், பதிவுகள், புத்தகங்கள், ஆன்லைன் வெப்சைட்டுகளை முற்றிலும் ஒழித்து அழிக்க தீவிர நடவடிக்கை வேண்டும் போன்ற அடுத்தடுத்து மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்போம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %