மாநில அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை:
மாநில அளவிலான கராத்தே போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர்.
மாநில அளவிலான கராத்தே போட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் செப்டம்பர் 7 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சார்ந்த சாய் ரக்சன் 2 தங்கம், தீக்சன் 2 தங்கம், சமிஷ்கா 1 தங்கம், அவ்ஷிகா 1 தங்கம், தியாலக்ஷ்மி 1 தங்கம் 1 வெள்ளி, ஸ்ரீ நிரஞ்சன் 1 தங்கம் 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி, லிங்கேஸ்வரன் 1 வெள்ளி 1 வெண்கலம், மதன் கார்த்திக் 1 வெள்ளி 1 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், தலைமை பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன், அணி மேலாளர் ஜெய்சித்ரா, உதவி பயிற்சியாளர் அருண்பிரியா ஆகியோரையும் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.