Read Time:1 Minute, 9 Second
சிதம்பரம், பிப்.27-
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உள்ள திருக்குளம் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு புதுப் பிக்கப்பட்டது. இதனை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிதம்ப ரம் நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் சீனிவாசன், நகர மன்ற கவுன்சிலர்கள் ஜெய சித்ரா பாலசுப்பிரமணியன், மணி, அரசு ஒப்பந்ததாரர் சண் முகசுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி