அண்ணாமலை நகர், பிப்.27
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற ஆண்டு விழா தடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை போலின் வில்லியம் தலைமை தாங்கினார். பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசிர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிவபுரி சிவ அரசு உயர்நிலைகள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஜி.தியாகராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி கலந்துகொண்டு பல்வேறு போட் டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். முன்னதாக ஆசிரியர் பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை ஜோஸ்பின் தேவகிருபை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் அண்ணாமலை நகர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்க அன்பரசு, புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி