Read Time:1 Minute, 11 Second
சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக ரூபாய் ஒரு கோடியே 37 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கலையரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் விழாவில் கோகுல் வாண்டையார் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம் ஒன்றிய துணைச் செயலாளர் பொன்னுச்சாமி ஒன்றிய மாணவர்களின் துணை அமைப்பாளர் பார்த்திபன் முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் ஊராட்சி செயலாளர் சங்கீதா மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி