கடலூர்,பிப்.7-சிதம்பரம் அண்ணாமலைநகரில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அண்ணாமலைநகர் ஏஆர்ஜி அகடமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை வகித்தார். சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்க்கரசி, அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிக்கான (மாற்றுத் திறனாளி) சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகம் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி வழங்கினார்.
பயனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி சுகாதார மேற்பார்வை செல்வம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி