தமிழக வெற்றிக் கழக தலைமைக் கழக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாளையும், கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ். சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளையும் முன்னிட்டு, சிதம்பரம் நகரக் கழக கிழக்கு செயலாளர் ஆர். எஸ். பாலு அவர்களின் தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ரமேஷ் குமார் அவர்களின் சார்பில் சிதம்பரம் AR மஹால் மற்றும் பேருந்து நிலையத்தில் மாபெரும் சிறப்பு அன்னதான முகாம் நடைபெற்றது.
இந்த அன்னதான முகாமில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் நகர மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், நகர இணைச் செயலாளர் ராஜேஷ், துணைச் செயலாளர் சக்கரவர்த்தி, நகரக் கழக பொருளாளர் சேகர், செயற்குழு உறுப்பினர் கணேஷ், அஜித், தமிழ், சுந்தர், தகவல் தொழில்நுட்ப (IT Wing) நிர்வாகி சபீர், நகர நிர்வாகி சதீஷ், நடராஜ் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தாயுமானவன், சபா சசிகுமார் மகளிரணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சரவணன், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் முகமது மீரான் மற்றும் இரா. கபிலர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.