0 0
Read Time:2 Minute, 32 Second

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை இயல்பாக தான் இருக்கும் என முன்னாள் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் பெரி பொறியியல் கல்லூரியில்
அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சுமார் 650 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த அறிவியல் கண்காட்சியினை முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் காற்றின் மாசு மற்றும் அதனை சீரமைக்க எளிய வழிகள், நெருப்பின்
வேதியல் விஞ்ஞானம், மற்றும் நியூக்ளியர் பாம் வெடித்து சிதறுவது போல பஞ்சுகளை
வைத்து தத்ரூபமாக செய்திருந்தனர்.எரிமலை வெடித்து சிதறுவது போலவும்
காட்சிப்படுத்தி அசத்தி இருந்தனர். குறிப்பாக ஆகாயத்தின் அறிவியல் அதிசயங்களான
சந்திரயான் மற்றும் விக்ரம் லான்டர் இந்த கண்காட்சியில் பார்வையாளர்களை
கவர்ந்தன. சிறந்த படைப்புகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

” இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் மூலம் எதிர்காலத்தில் பல விஞ்ஞானிகளை
உருவாக்க முடியும். பருவமழை சராசரியாக 40 செண்டிமீட்டர் மழை பெய்யும். ஆனால் நேற்றைய தினம் வரை 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருக்கும்.வானிலையை பொறுத்த அளவில் 10 நாட்களை கொண்டு தான் கணிக்க முடியும். தற்போது புள்ளிகள் அடிப்படையில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை
பெய்ய வாய்ப்பு உள்ளது”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %