சிதம்பரம் அருகே ஒரத்தூர் திருவள்ளுவர் மேல்நிலைப் பள் ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் – பி.செல்வராசு தலைமை தாங்கினார். பள்ளி குழுத் தலைவர் அருள்மொழி பொன்முடி, செயலாளர் பொ.பாரிவேல், பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் விஜயலதா, பள்ளிக்குழு உறுப் பினர்கள் அருள் வேந்தன், இந்திராணி, அறிவழகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் எஸ்.சம்பத் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கிரீடு தொண்டு நிறுவன தலை வர் வி.நடனசபாபதி, ஆசிரியர் வெ.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். விழாவில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுசித்ரா தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் தவச்செல்வன் செய்திருந்தார். முடிவில் ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி