0 0
Read Time:7 Minute, 46 Second

கடலூர்: கடலூரில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. சொந்த தொழிலை மேம்படுத்துவதற்காக, கடன் வாங்கியிருக்கிறார் மணிகண்டன். ஆனால், அந்த கடனை அவரால் திருப்பி தர முடியாத சூழலில், கடன் கொடுத்தவருக்கு பயந்து கொண்டு, ஊரைவிட்டு, வேறு இடத்துக்கு சென்றுள்ளார் மணிகண்டன். அப்போதுதான் மணிகண்டன் குடும்பத்துக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.

கடந்த வாரம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாராயணபுரம் என்ற கிராமத்தில் ஒரு கொடுமை நடந்தது.. திம்மராயப்பன் என்பவர், முனிகண்ணப்பா என்பவரிடம் வட்டிக்கு ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி அதை அவருக்கு அடைக்க முடியாத நிலைமை வந்தது.

இதனால் கடன்காரர்களுக்கு பயந்து, குடும்பத்துடன், தன்னுடைய கிராமத்துக்கு அருகிலுள்ள இடத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். பிறகு ஒருநாள், தன்னுடைய மகனின் பள்ளி சான்றிதழை வாங்குவதற்காக திம்மராயப்பனின் மனைவி ஸ்ரீஷா, ஏற்கனவே வசித்து வந்த நாராயணபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இது தெரிந்ததுமே கூட்டாளிகளுடன் கிளம்பி வந்த முனிகண்ணப்பா, உடனே 80 ஆயிரம் ரூபாயை எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்லி, அங்கிருந்த மாமரத்திலும் ஸ்ரீஷாவை கட்டிவைத்து தாக்கியிருக்கிறார்.. இந்த தாக்குதல் சம்பவம் சோஷியல் மீடியாவில் பரவி வைரலானது.. பிறகு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீஷாவை மீட்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.. அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுயும் உறுதி தெரிவித்திருந்தார்.

4 மாதத்துக்கு முன்பு, சேலம் வாழப்பாடியிலும் இப்படியொரு துயரம் நடந்தது.. துக்கியம்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற கூலித்தொழிலாளி, வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் 35 ஆயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கி, தவணை முறையில், மாத மாதம் 770 ரூபாய் கட்டி வருகிறார்.

ஒரு மாதம் மட்டும் பணமில்லாமல் தவணையை கட்டமுடியவில்லை. உடனே வங்கி ஊழியர்கள், ரூ.770 தவணை பணத்துக்காக, பிரசாந்தின் மனைவியை, பிணையாக வங்கிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.. இதுபோன்ற கொடுமைகளுக்குதான் தமிழக அரசு கடிவாளம் போட்டுள்ளது.. கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளை காட்டினால் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா பேரவையில் அமலாக்கம் செய்திருந்தது. பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 1 லட்சம் அபராதம் என்றும் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.. சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன். இவரது மகன் மணிகண்டன். இவர் பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கொந்தளித்த பழனிசாமி தன்னுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக பழனிச்சாமி என்பவரிடம் 6 லட்ச ரூபாயை மணிகண்டன் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், அந்த பணத்தை உடனே தர முடியாத சூழல் மணிகண்டனுக்கு நேரிட்டுள்ளது.. எனவே, மணிகண்டனும் அவரது அப்பா நடராஜனும், மயிலாடுதுறையிலிருந்து, சீர்காழிக்கு இடம் மாறினர். இந்த விஷயம் தெரிந்து பழனிச்சாமி கொந்தளித்துவிட்டார்.. உடனே தன்னுடைய ஆதரவாளர்களை மணிகண்டன் தங்கியிருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தார்.. ஆனால், மணிகண்டன் அங்கு இல்லை.. எனவே அந்த கோபத்தில், மணிகண்டணின் அப்பா நடராஜனை, ஆதரவாளர்களை காரில் கடத்தி சென்றுவிட்டார்கள்.. இதனிடையே, தன்னுடைய அப்பாவை பழனிச்சாமி கும்பல் கடத்தி செல்கிறார்கள் என்று போலீசுக்கு ஓடினார் மணிகண்டன்.. இந்த புகாரின்பேரில் விரைந்து சென்ற முத்துநகர் போலீசார், காரைக்காடு என்ற பகுதியில், வாகன சோதனை நடத்தி, நடராஜனை கடத்தி சென்ற காரை விரட்டி பிடித்தது.

காருக்குள் நடராஜன் அழுதுகொண்டேயிருந்தார்.. அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டிருந்தது.. அவரது முகம், உடம்பெல்லாம் காயங்கள் தென்பட்டன.. காருக்குள் அவரை கடத்திய 5 பேரும் இருந்தனர்.. அவர்களை கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோதுதான், அந்த கும்பல் நடராஜனை கடுமையாக தாக்கியதுடன் அவரது கைவிரலையும் துண்டித்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. நடராஜனுக்கு இப்போது கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாங்கிய கடனை மணிகண்டன் தரவில்லை என்பதால், நடராஜனின் பெயரில் உள்ள சொத்தை தங்கள் பெயருக்கு எழுதி வைக்குமாறு கடத்தல்காரர்கள் சித்ரவதை செய்தார்களாம். இதற்கு நடராஜன் ஒப்புக் கொள்ளாததால்தான், அவரை கடுமையாக தாக்கி, கைவிரலையும் வெட்டி எடுத்ததாக அந்தக் கும்பல் கூறியிருக்கிறது. ஆனால், கைது செய்யப்பட்ட 5 பேருமே முழு போதையில் உள்ளதால், விசாரணை தாமதமாகி வருகிறதாம். காரில் திமுக கொடி அதுமட்டுமல்ல, நடராஜனை திமுக கொடி கட்டிய காரில் கடத்தி, 5 பேரும் கடத்தி வந்ததாக தெரிகிறது.. எதற்காக திமுக கொடி கட்டிய வாகனத்தில் கடத்தி வந்தார்கள்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவை கடத்தி, அவரது கைவிரலை துண்டித்த சம்பவம் கடலூரை கதிகலங்க செய்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %