சிதம்பரம் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் உத்தரவின் பேரில் SSI தியாகராஜன், SSI .ரவி, Special Baranch GrI 1336 Tr.கோபாலகிருஷ்ணன், GrI 1380 Tr.தமிழ்ச்செல்வன், PC 815 Tr.ஞானசபை ஆகியோர் சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை எண் 3-ல் வந்து நின்ற T. No 16779 திருப்பதி to இராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு வண்டியில் பின்பக்கம் உள்ள பொது பெட்டியில் சோதனை செய்தபோது வெள்ளை நிற சாக்குப்பையில் கேட்பாரற்று கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 25 கிலோ எடையுள்ள புகையிலை, பான் மசாலா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்ததை கைப்பற்றி சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணைக்கு பின் சிதம்பரம் உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் வசம் ஒப்படைக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி