Read Time:1 Minute, 20 Second
பின்னத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா முன்னிலை வகித்தார் பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர்கள் கலையரசன் டாக்டர் மனோகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில் 16 துரைகளை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியில் துணை பி.டி.ஒ. சுப்புலட்சுமி அவைத்தலைவர் நல்லதம்பி ஒன்றிய துணை செயலாளர்கள் சுதா இளவரசு முன்னாள் சேர்மன் கருணாநிதி அமைப்புசாரா ஓட்டுனர் அணி சுப்பு வெங்கடேசன் இளைஞரணி துணை அமைப்பாளர் சேர மன்னன் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகிகள் காதர் மஸ்தான் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி