சிதம்பரம்,அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின், நாட்டு நல பணி திட்டத்தின் சிறப்பு முகாம் துவக்க விழா, சுவாமி சகஜானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது, இந்நிகழ்விற்கு பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மா.கனிமொழி வரவேற்புரை நல்கினார், உதவி தலைமை ஆசிரியர் வெ.ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஐ. சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர், பள்ளியின் தலைமை ஆசிரியை வ. எழிலரசி தலைமை வகித்து பேசினார், சிறப்பு விருந்தினராக மகளிர் மருத்துவர் கே.பாலகுமாரி கலந்து கொண்டு, பெண்கள் உடல் நலம் சார்ந்த பல ஆலோசனைகளை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார், மேலும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பி.பூபாலன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஆர். நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மனநலம் சார்ந்த ஆலோசனைகளையும் , நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார்கள்,சுவாமி சகஜானந்தர் மணிமண்ட வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது,
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் எஸ். மீனாட்சி,கே.கமலி செய்தார்கள், நன்றியுரை பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் பி. கலாராணி கூறினார்,
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி