0 0
Read Time:1 Minute, 29 Second

புவனகிரி ஒன்றியம் சி.முட்லூர் மேல் அனுபவம்பட்டு தீத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புவனகிரி அருகே உள்ள மண்டபம் கிராமத்தில் நடைபெற்றது.

இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஒன்றிய துணை செயலாளர் இளவரசு செல்வகுமாரி இளைஞர் அணி அமைப்பாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாமணி வரவேற்றார்.

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் புவனகிரி வட்டார ஆட்மா குழு தலைவருமான டாக்டர் மனோகரன் கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரவிந்தன் செந்தில் ராஜா ஓட்டுனர் அணி இணை செயலாளர் சுப்பு என்கின்ற வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %