Read Time:1 Minute, 8 Second
கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாக்குச்சாவடி திருவிழா சிதம்பரம் நகரத்தில் நகர செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி அமைப்பு செயலாளர் சௌ.ராஜா மாவட்ட தலைவர் கலையரசன் தேர்தல் பொறுப்பாளர் கமல்ராஜ் மாவட்ட துணை செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வெங்கட்ராமன் சிதம்பரம் நகரப் பகுதிகளில் மக்களிடையே ஆளும் திமுக அரசை அகற்றக் கோரி துண்டு பிரசுரம் வழங்கினார் நிகழ்ச்சியில் நகர செயலாளர் திலீப் ராஜன் மணிகண்டன் இளைஞர் அணி பாலமுருகன் குருமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி