0 0
Read Time:2 Minute, 1 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஔஷதி கேந்திரா இணைந்து நடத்திய, 8ஆம் ஆண்டு ஜன் ஔஷதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம், சிதம்பரம் மேலரத வீதி பெல்காம் அனந்தம்மாள் அறக்கட்டளை மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு சாசனத்தலைவர் P.முகமது யாசின், சாசன செயலாளர் M.தீபக் குமார், மக்கள் மருந்தகம் N. கேசவன், தொழிலதிபர் S.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாந்த தேசிகன் தலைமையில் சிறப்பு விருந்தினர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A. பாண்டியன் அவர்கள் முகாமை துவங்கி வைத்தார். இம்முகாமில் சிறப்பு மருத்துவர்கள் டாக்டர் N.பாரி, டாக்டர் R.கிருஷ்ணராஜ், டாக்டர் R.முருகன், டாக்டர் AV.கிரிதரன், டாக்டர் GT.சௌமியா திவாகர் ஆகியோர் கலந்துகொண்டு சுமார் 65 பயனாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். மக்கள் மருந்தகம் சார்பாக இலவச மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் ரோட்டரி நண்பர்கள் S. முனுசாமி, G.ஆறுமுகம், V. நடன சபாபதி, K.இந்தர், K.பழனியப்பன், G.சீனிவாசன், MD. ஜெயபாண்டியன், G.குமரவேல், P.ராஜசேகரன், P.சஞ்சீவ் குமார், N. அனந்தசபேசன், K.கார்த்திகேயன், R.வன்னியநாதன், மற்றும் மக்கள் மருந்தக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் K. புகழேந்தி நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %