நேற்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், தனது ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2017 ஆம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் செய்த போது, அவருக்கு ஆதரவாக இருந்தவர் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன்.
ஓ.பி.எஸ்-ன் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட இவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன்படி இன்று மாலை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த மனோஜ் பாண்டியன், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாண்டியன், “இன்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இந்த பதவியில் இருந்து விலகுவதாக பேரவை தலைவர் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் இடம் விதிப்படி கொடுத்திருக்கிறேன்.” என்றார்.
“நான் திமுகவில் இணைய போகிறேன் என்பதை தொலைபேசி வாயிலாக ஓபிஎஸ்சிக்கு நான் தகவல் தெரிவித்து விட்டுதான் திமுகவில் இணைந்தேன்” என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
“அதிமுக தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கமாகவும் இல்லை ஜெயலலிதா வளர்த்தெடுத்த இயக்கமாகவும் இல்லை அந்த இயக்கம் ஒருங்கிணையாது. தற்போது அதிமுக மத்திய பிஜேபியின் கிளைக் கழகமாக இங்கு செயல்பட்டு வருகிறது.” என மனோஜ் பாண்டியன் குற்றம்சாட்டினார்.
“மீண்டும் ஆலங்குளம் நான் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.