தமிழ்நாடு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை அன்பில் மகேஷ் இன்று கோட்டூர்புரம் Anna நூற்றாண்டு நுலக அரங்கில் வெளியிடுகிறார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது.
ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வந்தது.
இதில் இந்த கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுலக அரங்கில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அட்டவணையை வெளியிடுகிறார். அப்போது, 11 ஆம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்படுகிறது.