0 0
Read Time:2 Minute, 42 Second

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதில், 28,353 தனித் தேர்வர்கள், மற்றும் 73 சிறை கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,119 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு அறைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்து, அனைவருக்கும் 3 அடுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து, ஆறடி இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு அறையை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வினாத்தாள் அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %