0 0
Read Time:3 Minute, 45 Second

தேர்தல் ஆணையத்திடம் பேசிய பின்னரே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். மார்ச் 2 இல் தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவித்தார். மார்ச் 11 ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 16 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு முடிந்த பின் எட்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மார்ச் 25 ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெறுகிறது.

மார்ச் 30 ஆம் தேதி அறிவியல் பாடத்திற்கும், ஏப்ரல் 2 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும், ஏப்ரல் 6 ஆம் தேதி விருப்ப மொழிப் பாடத் தேர்வும் நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார். மார்ச் 2 ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வும், மார்ச் 5 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெற உள்ளது.
மார்ச் 9 ஆம் தேதி வேதியியல், மார்ச் 13 ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதாரம், மார்ச் 17 ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 23 ஆம் தேதி உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கும், மார்ச் 26 ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தேதி தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு மே 8 ஆம் தேதியும் வெளியாகும் என்று அன்பில் மகேஸ் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *