மொந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள “மொந்தா” புயல் இன்று கரையை கடக்கவுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டாலும், ஆங்காங்கே கனமழை நீடிக்கும் என்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்தும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன் படி நேற்று முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடை விடாது மழை தொடர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும், மழையை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை மேலும் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.