Read Time:1 Minute, 5 Second
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் குமராட்சி கிழக்கு ஒன்றியம் சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சங்கர் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி ஆதி திராவிட நல குழு துணை அமைப்பாளர் பரந்தாமன் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக துணை அமைப்பாளர் குட்டிமணி ஜெகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரியிடம் மனுக்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி