0 0
Read Time:2 Minute, 28 Second

நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாகவும் அடுத்த சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சி நிறுவனரான ராமதாஸும் கிராமம்தோறும் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அதற்கான தேதி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ராமதாஸுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் இருதயம் தொடர்பான மூத்த மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்னும் ஓரிரு நாட்களில் ராமதாஸ் இல்லம் திரும்புவார்” எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %