0 0
Read Time:2 Minute, 37 Second

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதனிடையே, பாமக தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இதன் காரணமாக பாமக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவை அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு சொந்தமானது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இது ராமதாஸ் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தது.

இதனிடையே, பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று மறு சீராய்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போதைய சூழலில் நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தக்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %