Read Time:58 Second
பா.ம.க. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதாக கூறியும், மாம்பழம் சின்னம் ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்தும் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சிவி, கலையரசன், மாநில துணைத்தலைவர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ராஜா நகர செயலாளர் கார்த்திகேயன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி