Read Time:1 Minute, 7 Second
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கான பதிவு உயர்வு மற்றும் பண பயன்கள் மற்றும் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி இளங்கோவன் மதியழகன் கபில்தேவ் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆசிரியர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இந்த நிலையில் போராட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் ஆதரவு தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.