0 0
Read Time:2 Minute, 12 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கமும் இணைந்து தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

01.08.2025, வெள்ளிக்கிழமை, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கமும் இணைந்து தாய்ப்பால் வார விழா அலிசியா ஹெல்த் சென்டரில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் Dr. அபிராமி செல்வகணபதி அவர்கள் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.
தாய்ப்பாலின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கையேடு வெளியிடப்பட்டது. சாசன தலைவர் P. முகமது யாசின் அவர்கள் கையேட்டை வெளியிட இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்தின் செயலர் Dr. R. பிரவீன்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். மக்கள் மருந்தகம் N. கேசவன் அவர்களின் பங்களிப்பில் சங்கத்தின் சார்பில் சாசன செயலாளர் M. தீபக் குமார் அவர்களால் பங்கு பெற்ற தாய்மார்களுக்கு புரதச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
சங்கத்தின் முன்னாள் தலைவர் நடன சபாபதி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் G.P. விஜயபாலன், M.D. ஜெயபாண்டியன், I. யாசின், N. பாவிக் பட்டேல், N. ஆனந்தசபேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் செயலாளர் K. புகழேந்தி நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %