0 0
Read Time:2 Minute, 46 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் காஸ்மாபாலிடன் லயன்ஸ் சங்கம், பாரதிய ஜெயின் சங்கட்டனா பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கமல் தீப் நிறுவனத்தார் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

மாலை கட்டி தெருவில் உள்ள ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். லயன்ஸ் மாவட்ட ஆளுநர் II M. கமல் கிஷோர் ஜெயின், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் V. ஹரிகிருஷ்ணன், காஸ்மாபோலிடன் லைன்ஸ் சங்கத் தலைவர் இளஞ்செழியன், பாரதிய ஜெயின் சங்கட்டனா தலைவர் மனிஷ்குமார் சல்லாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற முகாமில் ரோட்டரி மண்டல ஆளுநர் S. புகழேந்தி, சாசன தலைவர் P. முகமது யாசின், கமல் தீப் நிறுவனத்தின் சார்பில் M. தீபக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் வெங்கடேசன், ரோட்டரி சங்க செயலாளர் K. புகழேந்தி, பொருளாளர் N. கோவிந்தராஜன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் உறுப்பினர்களும் செய்திருந்தனர். 80 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ராமச்சந்திரன், மனோகரன், அரவிந்தன் பிரகாஷ் சந்த் பாண்டியன், மணிகண்டன், சின்னத்துரை, ரோட்டரி சங்கத்தின் சார்பில் G. சீனிவாசன், S. சண்முகசுந்தரம், I. யாசின், G. ஆறுமுகம், G.P. விஜயபாலன், K. பழனியப்பன், V. சேதுராமன், K. கார்த்திகேயன், G. சுனில் குமார், L. ஜினேந்தர், R. அருள், பாரதிய ஜெயின் சங்கம் சார்பில் பிரகாஷ் காபியா, ஜுனேந்திர சொராடியா, நிர்மல் கத்தோடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %