0 0
Read Time:4 Minute, 7 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் அலிசியா ஹெல்த் சென்டர், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை மற்றும் மக்கள் மருந்தகம் இணைந்து சிதம்பரம் பைபாஸ் லிங்க் ரோட்டில் உள்ள அலிசியா ஹெல்த் சென்டரில் மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் V. ஹரிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில், சாசன தலைவர் P. முகமது யாசின், சாசன செயலாளர் M. தீபக்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் G. சீனிவாசன், V. நடனசபாபதி மற்றும் மூத்த உறுப்பினர்கள் RM.ST. சுப்பையா, A. விசுவநாதன், P. பன்னாலால் ஜெயின், S. முனுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சிறப்பு திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் G. ஆறுமுகம் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கடலூர் அரசு மருத்துவமனை டீன் மற்றும் சிறப்பு அதிகாரி மருத்துவர் C. திருப்பதி அவர்கள் முகாமை தொடக்கி வைத்தார். மண்டல துணை ஆளுநர் S. புகழேந்தி மற்றும் மிட்-டவுன் ரோட்டரி சங்க உறுப்பினர் K. கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார்கள். முகாமில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் R. பிரவீன் குமார், மகளிர் நல மருத்துவர் டாக்டர் அங்கிதா சிங், பொதுநல மருத்துவர் டாக்டர் N. பாரி, மார்பக புற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் M. பிரேமா, எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் A.V. கிரிதரன், பல் மருத்துவர் டாக்டர் R. கிருஷ்ணராஜ், டாக்டர் D. சௌமியா மற்றும் இயன்முறை மருத்துவர். திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு பல்நோக்கு சிகிச்சைகளுக்கான ஆலோசனைகளும், சிகிச்சைகளும், தேவைப்படும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தை சார்ந்த அனைத்து உறுப்பினர்கள், அலிசியா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள்மற்றும் ஊழியர்கள், ஷெம்போர்டு CBSE பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். முன்னதாக, சங்கத்தின் பொருளாளர் G. கோவிந்தராஜன் தலைமையிலான உறுப்பினர்கள் K. இளவரசன், G. சுனில் குமார் போத்ரா, R. அருள், S. சண்முகசுந்தரம், I. யாசின் உள்ளிட்டவர்கள் முன்பதிவு செய்த பயனாளிகளை ஒருங்கிணைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Rtn. M. தீபக்குமார் மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளையுடன் இணைந்து மக்கள் மருந்தகம் கேசவன் அவர்கள் முகாமில் பங்கேற்ற அனைத்து நோயாளிகளுக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முடிவில், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் K. புகழேந்தி நன்றி கூறினார்கள்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %