0 0
Read Time:1 Minute, 34 Second

சிதம்பரம்,ஜூலை.12-இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயிலான சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள திரு வேட்களம் பாசுபதேஸ் வரர் கோயிலில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடக்க விழாவை நேற்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து பாசுபதேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பூமி பூஜையில் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார், கோயில் அறங்காவலர் பெத்தபெருமாள்,
கோயில் ஆய்வாளர் சீனிவாசன்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி,கவுன்சிலர் அன்பரசன் மற்றும் திமுக நிர்வாகி ஆனந்த் உட்பட பலர் உடன் இருந்தனர்.
அதேபோல் சிதம்பரம் அருகேயுள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %