0 0
Read Time:3 Minute, 29 Second

பிப்ரவரி 1-2023,

சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி ,இரட்டைமடி ,அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் வாரத்தில் இரண்டு நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்திருந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான தரங்கம்பாடியில் சுருக்குமடி வலையை முற்றிலும் தடைசெய்ய கோறுவது தொடர்பாக 11 மாவட்ட மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை பொதுக்கூட்டம் நேற்று (31.01.2023) தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, திருவாரூர் , தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டைமடி, அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பது குறித்து மீனவ பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கூட்டத்தின் முடிவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலை, இரட்டைமடிவலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ள விசைப்படகு ஆகிய மூன்றையும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை வருமானால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை வருமானால் 11 மாவட்ட மீனவ கிராமங்களும் தொழில் மறியல் செய்வது என்று ஏகமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர்:க சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %