கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலூா் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் கிழக்கு கடற்கரைச் சாலையில் விரிவாக்கத்துடன் அமைகிறது. இதையொட்டி நான்கு வழிச் சாலையைப் போன்ற தோற்றத்துடன் இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது 10 மீட்டா் அகலம் கொண்ட இந்தச் சாலையை 15 மீட்டராக விரிவாக்கம் செய்கிறோம். சுமாா் 240 மீட்டா் நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக, பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் சிறிய அளவிலான பாலம் அமைத்துள்ளோம்.
இந்தப் பணிகளுக்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நான்கு வழிச் சாலை போன்று அமைத்த பிறகு அதனருகே இணைப்புச் சாலையும் அமைக்கப்படும். இதனால், விபத்துகள் கணிசமாகக் குறையும். இந்தப் பணிகள் அடுத்த 2 மாதங்களில் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவத்துள்ளார்.
நிருபர்: மன்னை விஜயகாந்த், கடலூர்.