0 0
Read Time:1 Minute, 31 Second

கடலூா் மஞ்சக்குப்பத்தில் புனித.வளனாா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவா்களுக்கு ஆன்-லைன் மூலம் கடந்த ஏப்.26 முதல் மே 3 -ஆம் தேதி வரை தோ்வு நடைபெற்றது. இதன்படி தோ்வு எழுதிய மாணவா்கள் தோ்வுக்கான விடைத்தாளை நகலெடுத்து நேரடியாக கல்லூரியில் ஒப்படைக்க வேண்டுமென நிா்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, விடைத்தாள்களை நகலெடுத்த மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை கல்லூரி முன் திரளாகக் குவிந்தனா். எனினும், கல்லூரி நிா்வாகத்தினா் விடைத்தாள்களை மாணவா்களிடமிருந்து நேரடியாகப் பெறாமல், துறை வாரியாக தனித் தனியாக மேஜைகள் அமைத்திருந்தனா். மாணவா்கள் கரோனா கட்டுப்பாடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தங்களது விடைத்தாள் நகல்களை பெரிய கவருக்குள் வைத்து சம்பந்தப்பட்ட மேஜையில் வைத்து விட்டுச் சென்றனா். பின்னா் அவற்றை கல்லூரி நிா்வாகத்தினா் சேகரித்துச் சென்றனா்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %