0 0
Read Time:1 Minute, 51 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே உள்ள முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரிரயை அடுத்து நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர்.

சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் அங்காளம்மன் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு மயானத்தை (சுடுகாட்டை) அடைந்தது. மயான கொள்ளையில் பக்தர்கள் வேண்டுதலாக விரதம் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுவாமி தீபாரதனைக்கு பிறகு பக்தர்கள் பேச்சாயி வேடமனிந்து கிழங்கை கொள்ளை விடும் நிகழச்சி நடைபெற்றது.

இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கனக்கான பக்தர்கள் இந்த விழாவில்கலந்து கொண்டு கிழங்கு வகைகளை எடுத்துச் சென்றனர்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %