0 0
Read Time:1 Minute, 34 Second

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான 2021 ஆம் ஆண்டிற்கான தனி ஒருவன் விருது பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் திருச்சியில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவர் மனிதத்தையும் மண்ணையும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களை இருசக்கர வாகனத்தில் தேடிச்சென்று காலை உணவு அளித்து வருகிறார். மேலும் இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நடுதல், பனை விதை நடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இவர் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்களிடம் பாராட்டுக்களை பெற்றவராவார். தனி ஒருவன் விருது கிடைத்ததற்கு ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %