0 0
Read Time:1 Minute, 32 Second

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

இதனால், அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரிகளும் காப்பீடு நிறுவன அதிகாரிகளும் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து முழுமையான காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %