சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீநந்தனார் வீதியுலா நடைபெற்றது.
சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள சௌந்தரநாயகி சமே சிவலோகநாதர் கோயிலிலிருந்து ஸ்ரீநந்தனார் உருவப்பட ஊர் வலம் புறப்பட்டு சிதம்பரம் தெற்கு சந்நிதியை அடைந்தது. அங்கு, நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம் தலைமையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமத்துவ மக்கள் படை நிறுவனருமான ப.சிவகாமி, நந்தனார் பட ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். இந்த ஊர்வலம் நடாரஜர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தை சென்றடைந்தது. கீழசந்நிதி யில் நந்தனாருக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம், பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், கல்விக் கழகச் செயலர் வி.திருவாசகம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், அறக் கட்டளை செயலர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி.பன்னீர்செல்வம், கே.கனக சபை, டி.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி