0 0
Read Time:2 Minute, 2 Second

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %