0 0
Read Time:2 Minute, 18 Second

சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 50 பேர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் இணைந்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையினை ஏற்று கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் கடலுர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் நகர கழக முன்னாள் செயலாளர் பி.கே.மணிவண்ணன் தலைமையில் நகர இணை செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர்கள் இளையராஜா, திருநீலகண்டன், திரிபுரசுந்தரி, மாவட்ட பிரதிநிதி பிரபு, சீனிவாசன், தேவி வார்டு செயலாளர்கள் தங்கமணி, விவேக், சுந்தர்ராஜன், ராம்பிரகாஷ், பரணி ஜெயவீரபாண்டியன், முத்துகுமார், அசோக், சங்கர், உள்ளிட்ட 50 பேர் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள், நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் ப.அசோகன், பேராசிரியர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் எஸ்.செழியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் செளந்தராஜன், விவசாய பிரிவு இணை செயலாளர் மாயவன், நகர பாசறை செயலாளர் டேங்க் சந்தோஷ், ஒன்றிய ஐ.டி.விங் செயலாளர் ஜீவா, துணை செயலாளர் மணிவண்ணன், தீன.வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %