Read Time:1 Minute, 13 Second
பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவில் கூட்டுறவுத்துறை சார்பில் முதல்வரின் தாயுமானவர் திட்ட துவக்க விழா நடைபெற்றது பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கினார் முன்னாள் துணை சேர்மன் செழியன் வர்த்தக சங்கத் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர் தாயுமானவர் திட்டத்தை பேரூராட்சி துணைத்தலைவர் முகமது யூனுஸ் திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர் துவக்கி வைத்து, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தங்கவேலு கவுன்சிலர்கள் சரவணன் மாரியப்பன் நிர்வாகி கணேசன் மூர்த்தி உன் முகமது ஜாப் அலி சிவபாலன் அப்பாஸ் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி