0 0
Read Time:1 Minute, 40 Second

பரங்கிப்பேட்டை அருகே சேந்திரக்கிள்ளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இதற்குவட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். புவனகிரி தாசில்தார் அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரங்கிப்பேட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முகாமில் 16 துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றனர்.
இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பிருந்தா, வருவாய்த்துறை ஆய்வாளர் கங்காத ரன்,ஊராட்சிசெயலாளர்கள் வேலங்கிப்பட்டு சதீஷ்குமார், சேந்திரக்கிள்ளை மதியழகன், தச்சக்காடு பன்னீர்செல்வம் உள்பட கிராம மக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %