சிதம்பரம் ஷெம்போர்டு சி.பி.எஸ்.இ பள்ளி 14 வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி நிறுவனர் ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கே.ரேவதி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி முதல்வர் ஏ.லதா பள்ளியின் சாதனைகளை விளக்கி பட்டியலிட்டு ஆண் டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆர்.கேதார்நாதன் மற்றும் டிஏவி பள்ளி குழு மத்தின் துறை தலைவர் (சமூக சேவை திட்டம்) பி.ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பள்ளி செயலர் வி,அரிகி ருஷ்ணன், நீர்நிலை பாதுகாப்புக்குழு எம்.செங்குட்டுவன் மற்றும் ரோட்டரி சங்கத்தில் மூத்த உறுப்பினர் ஆர்எம்.எஸ்டி.சுப்பையா ஆகியோருக்கு வாழ்நாள் சேவையாளர் விருது வழங்கப்பட்டது. மிட்டவுன் ரோட்டரி முன்னாள் ஆளுநர் பி.முகமது யாசினிற்கு கல்வி சார்ந்த சேவைக்காக காமராஜர் விருதும், ரோட்டேரியன் எம்.தீபக்குமாருக்கு அன்னபூர்ணா விருதும், தொழிலதிபர் எஸ். சண்முகசுந்தரத்திற்கு சேவை செம்மல் விருதும் வழங்கப்பட்டது. நிறைவில் பள்ளி செயலர் வி.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி